இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்கவுள்ள பங்களாதேஷ்

பாரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்தாலும், இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்கலாம் என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவான் வீரகோன் மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து உலகளாவிய உணவுப் பிரச்சினைக்கு மத்தியில் அதிக உணவு வகைகளைப் பயிரிட பங்களாதேஷ் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ங்காளதேஷ் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு உப்பு மற்றும் வறட்சியைத் தாங்கும் அரிசி வகைகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


சார்க் விவசாய மையத்துக்கு பங்களாதேஷின் பங்களிப்புக்காக வீரகோன் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தொற்று நோய் காரணம் என்றும், வங்கதேசம் இலங்கை தேசத்துக்கு அளித்து வரும் ஆதரவைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.


அரிசி உற்பத்தி 50% குறைந்துள்ளதால் இலங்கைக்கு தற்போது உரம் தேவைப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 வறுமைக்கு எதிரான போராட்டத்தில் தெற்காசிய நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ஹசீனா வலியுறுத்தினார்.
———–
Reported by:Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *