இலங்கைக்கு அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு இங்கிலாந்து அறிவுரை

இலங்கையை சிவப்பு பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்றப் பயணங்கள் அனைத்துக்கும் எதிராக ஐக்கிய இராச்சியம் அறிவுறுத்தியுள்ளது.

 கடந்த புதன்கிழமை முதல் கொவிட் நிலைமையில் இலங்கையானது, இங்கிலாந்தின் சிவப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு அம்பர் பட்டியலுக்கு மாற்றப் பட்டுள்ளது.

 எனினும் கொவிட்-19 தற்போதைய மதிப்பீட்டின் படி முழு இலங்கைக்கும் அத்தியாவசிய பயணம் தவிர மற்ற அனைத்துக்கும் எதிராக வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *