சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இறப்பர் பந்து போன்று சுருட்டி வீசப்பட்டதை காணொளியில் பார்த்ததாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப் பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒரு ஹெக்டேர் நெல் வயல்களுக்கு 137 கிலோ யூரியாவும், சீனாவில் 525 கிலோவும், இந்தியாவில் 250 கிலோ யூரியாவும் பயன்படுத்தப் படுவதாக அவர் கூறினார்.
இலங்கையைப் போன்று மூன்று நான்கு மடங்கு உரமிடும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி நஞ்சற்ற உணவை எமக்குத் தருகிறதா எனக் கேள்வி எழுப்பினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
———-
Reported by : Sisil.L