இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் பால்மா இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளனர்.
இச்சந்திப்பின்போது பால்மா இறக்குமதியாளர்கள் பல வேண்டுகோள்களை விடுத்துள்ளனர்.
சர்வதேச, உள்நாட்டுச் சந்தைகளின் நிலவரம், வரிகள் உட்பட பல விடயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் நாணயம் பெறுமதி இழந்துள்ளதால் சர்வதேச விலைகள், கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளன என்பதை சுட்டிக்காட்டி பால்மா இறக்குமதி யாளர்கள் தொடர்ச்சியாக விலைகளை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L