நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்புகளை அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கு மட்டும் விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த வாரம் முதல் பல்பொருள் அங்காடிகள் மூலம் உரிய அரிசிக் கையிருப்பு நுகர்வோருக்கு கிடைக்கும்.
வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் பல்பொருள் அங்காடிச் சங்கிலியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பல்பொருள் அங்காடிகளில் நுகர்வோர் ஒருவர் அதிகபட்சமாக 5 கிலோ அரிசி வாங்க முடியும்.
இதன்படி ஒரு கிலோ நாட்டு அரிசியை 145 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாவுக்கும் பெற்றுக்கொள்ள முடியும்.
—————-
Reported by : Sisil.L