இன்று(16) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ஒன்றின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படுவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை குறைவடைந்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.
இதனிடையே, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாவாக குறைக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி பொருட்களுக்கு கோதுமை மாவை வழங்கும் 02 பிரதான நிறுவனங்களும் இதுவரையில் அவற்றின் விலைகளை குறைக்கவில்லை என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அவர் மேலும் கூறியுள்ளார்.
Reported by :Maria.S