இன்று நடைபெறும் மிக்கைல் கோர்பசேவ் இறுதி சடங்கில் புதின் பங்கேற்பாரா..?

மாஸ்கோவில் இன்று நடைபெறும் மிக்கைல் கோர்பசேவ் இறுதி சடங்கில் புதின் பங்கேற்பாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்கோ, சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான மிக்கைல் கோர்பசேவ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் கடந்த 30-ந்தேதி தனது 91 வயதில் காலமானார். ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்தது. மிக்கைல் கோர்பசேவின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். இந்தநிலையில் மிக்கைல் கோர்பசேவின் இறுதி சடங்கு இன்று (சனிக்கிழமை) மாஸ்கோவில் அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது. எனினும் இதில் அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் என அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தனது சீா்திருத்த நடவடிக்கைகள் மூலம் வலிமை வாய்ந்த சோவியத் ஒன்றியம் சிதறியதற்கு மிக்கைல் கோா்பசேவ் காரணமாக இருந்ததாக ரஷியாவில் விமா்சிக்கப்படும் நிலையில், இதன்காரணமாகவே அவரது இறுதிச் சடங்கை புதின் தவிா்ப்பதாக விமர்சனங்கள்
எழுந்துள்ளன. எனினும் மிக்கைல் கோர்பசேவ் உடல் வைக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரிக்கு புதின் நேற்றுமுன்தினம் சென்று அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *