தமிழினப் படுகொலை விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இனியும் தாமதிக்காது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கனடியத் தமிழர்கள் மாபெரும் வாகனப் பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரொறன்டோவில் இந்தப் பேரணி இடம்பெறும்.
கனடியத் தமிழர் தேசிய அவை, கனடியத் தமிழர் சமூகம், மாணவர் சமூகமும் இணைந்து பேரணி ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
மார்க்கம் ஸ்டில்ஸ் சந்திப்பில் வாகனப் பேரணி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும்.
சம நேரத்தில் பிராம்டனில் குயின் மற்றும் மெயின் வீதி சந்திப்பிலிருந்தும் வாகனப் பேரணி ஆரம்பமாகும்.
தொடர்ந்து 360 யூனிவர்சிட்டி அவெனியுவில் பிற்பகல் 3:30 தொடக்கம் 5:30 வரை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
——————-
Reported by : Sisil.L