இன்றைய தினம் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வருகிறார். எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்துக்கும் வருகை தருவார் என்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்புக்கு அமைய இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இலங்கை வருகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு மேற்கொள்ளவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதவிர ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழ், மலையகக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்துடன் இந்திய வெளிவிவகார செயலாளர் யாழ்ப்பாணம் தவிர கண்டி, திருகோணமலை மற்றும் ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அவர் கொழும்பிலேயே சந்தித்துப் பேசுவார் என்றும் தெரியவருகின்றது.
———
Reported by : Sisil.L