இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (16) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Batti Malv’ என்ற கப்பல் 46 மீட்டர் நீளமும், மொத்தம் 101 பணியாளர்களையும் கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் MAN Singh M Mane மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியும் தன்னார்வ கடற்படையின் தளபதியுமான ரியர் அட்மிரல் தம்மிக்க குமார ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (16) கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன் இக் கப்பலின் குழுவினர் கடற்படை சிறப்பு படகுகள் படையணி தலைமையகத்தில், கப்பலுகளுக்கு நுழைவு மற்றும் ஆய்வு, கைது நுட்பங்கள் (Visit Board Search & Seize – VBSS) குறித்த பயிற்சியிலும் பங்கேற்றனர்.
மேலும், ‘INS Batti Malv’ என்ற கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், நாட்டின் முக்கிய இடங்கள் மற்றும் பல பகுதிகளை பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்த பின்னர், ‘INS Batti Malv’ என்ற கப்பல் இன்று (17) தீவை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு இலங்கை கடற்படைக் கப்பலொன்றுடன் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடல் பகுதியில் கடற்படைப் பயிற்சியில் (PASSEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Reported by:Maria.S