குன்னூர் அருகே இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.
இக்கோர விபத்தில் சிக்கி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.இதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
உலகின் மிக உயரிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட, ரஷ்யாவின் கசன் நிறுவன தயாரிப்பான எம்.ஐ – 17வி5 என்ற இராணுவ ஹெலிகொப்டரில் இவர்கள் பயணம் செய்துள்ளனர். தலைமை ஜெனரல் பயணம் செய்ததால் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புக்குப் பிறகே ஹெலிகொப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 11.47 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகொப்டர் புறப்பட்டிருக்கிறது.
இந்த விபத்தானது இன்று மதியம் 12.20 மணிக்கு, அதாவது வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு 10 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்தது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட இராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளன.
ஹெலிகொப்டரின் விமானி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை நாளை இந்தியாவில் துக்க தினம் அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L