இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து ; 13 பேர் உயிரிழப்பு

குன்னூர் அருகே இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று  காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.  முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.  

இக்கோர விபத்தில் சிக்கிய 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 உலகின் மிக உயரிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட, ரஷ்யாவின் கசன் நிறுவன தயாரிப்பான எம்.ஐ – 17வி5 என்ற இராணுவ ஹெலிகொப்டரில் இவர்கள் பயணம் செய்துள்ளனர். தலைமை ஜெனரல் பயணம் செய்ததால் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புக்குப் பிறகே ஹெலிகொப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 11.47 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகொப்டர் புறப்பட்டிருக்கிறது.

இந்த விபத்தானது இன்று மதியம் 12.20 மணிக்கு, அதாவது வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு 10 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்தது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பிபின் ராவத்துடன் அவரது மனைவியும் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட இராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளன. தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
—————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *