கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவென அடுத்த வாரம் 100 மெட்ரிக் தொன் ஒட்சிசனை வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை அதை இந்தியாவிடமிருந்து வாங்கும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.கொவிட் தொற்றாளர்கள் அதிவேகமாக அதிகரிப்பதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஒட்சிசன் உற்பத்தி இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் முன்னர் கூறியிருந்தார்.
எனினும் அதிகரித்து வரும் தேவையை அடுத்து இலங்கை ஒட்சிசனை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
எவ்வாறாயினும், மற்ற நாடுகளுக்கும் ஒட்சிசன் கையிருப்பு தேவைப்படுவதால், இலங்கை, இறக்குமதியை முழுமையாக நம்ப முடியாது என்று மருத்துவர் ஹேரத் குறிப்பிட்டார்.
——————
Reported by : Sisil.L