இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின் வலையமைப்பை இணைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த வேளை இந்திய விஜயத்தின் போது இந்திய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே அந்தக் கலந்துரையாடல்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்க இந்தியா நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
—————–
Reported by : Sisil.L