இத்தாலியின் முதல் பெண் பிரதமராக, ‘இத்தாலியின் சகோதரா்கள்’ (Brothers of Italy) கட்சியின் தலைவா் ஜோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தோ்தலில் அவரது கட்சி முன்னிலை பெற்றதைத் தொடா்ந்து, அவா் பிரதமராக பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது.
தீவிர வலதுசாரி கொள்கைகளைக் கொண்ட அந்தக் கட்சியின் தலைமையில் அமையவிருக்கும் அரசு தான், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இத்தாலியின் முதல் வலதுசாரி அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவி வரும் எரிசக்தி பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலையை சமாளிப்பதற்காக சலுகைக் திட்ட சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதமர் Mario Draghi அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற்றார். பின்னர் Mario Draghi கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீா்மானம் தோல்வியடைந்தது. இதனால் அவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.
அதையடுத்து, பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்குமான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மிகவும் குறைவான விகிதத்தில் வாக்குகள் பதிவான அந்தத் தோ்தலில், ஜோர்ஜியா மெலோனி அங்கம் வகிக்கும் வலதுசாரி கூட்டணி 43.8 சதவீத வாக்குகளைக் கைப்பறியது.
மத்திய இடதுசாரி கூட்டணி 26.1 சதவீத வாக்குளுடன் பின்தங்கியது. குசெப்பே கான்டேவின் Five Star Movement கட்சிக்கு 15.4 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
அதையடுத்து, மெலோனி தலைமையில் கூட்டணி அரசு அமையவிருப்பது உறுதியாகியுள்ளது.
Reported by :Maria.S