ஆர்ப்பாட்டங்கள் மூலம் நாட்டிற்கு தேவையான டொலரை உழைக்க முடியாது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையத்தை திறக்குமாறு கோரி இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
டொலரை பாதுகாப்பதற்காகவே இலங்கை கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சப்புகஸ்கந்த எண்ணெய் தொழிற்சாலையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது அவசியம் எனக் கருதுவதாகத் தெரிவித்துள்ள அவர் எனினும் தொழிற்சங்கங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் இதனைப் புரிந்து கொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மை ஆர்ப்பாட்டங்கள் எங்களுக்கு டொலரை பெற்றுத்தராது அமைச்சர் என்ற வகையில் எனக்கு டொலரை உழைப்பதற்கான திறமையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
—————-
Reported by : Sisil.L