அஸ்ட்ரா ஜெனகா பெற்றோருக்கு பைசர் தடுப்பூசி இரண்டாவது டோஸாக வழங்கப்படும் : அமைச்சர் ஜயசுமண

இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பைசர் தடுப்பூசியை அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார். மேலும் 26ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரத்திலும் 60ஆயிரம் தடுப்பூசிகள் மூன்றாம் வாரத்திலும் 90ஆயிரம் தடுப்பூசிகள் ஜூலை மாதத்தின் 4ஆம் வாரத்திலும் என இந்த மாதத்தில் மட்டும் 2 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.

இன்று கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து (-70 பாகை செல்சியஸில் சேமிப்பதற்காக) நேரடியாக நாரஹேன்பிட்டியிலுள்ள மத்திய இரத்த வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
———————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *