புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட நிலையில் கைதான 23 இலங்கையர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 3.50 அளவில் நாட்டை வந்தடைந்தனர்.
நீர்கொழும்பு, கொஸ்வாடிய மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே நாட்டை வந்தடைந்தனர்.
அவர்கள் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி வென்னப்புவ – கொஸ்வாடிய பகுதியிலிருந்து பலநாள் படகில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முற்பட்டனர்.
இந்தநிலையில், அவர்களை அவுஸ்திரேலிய கடலோர காவல்துறையினர் கைது செய்து நாடு கடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
———-
Reported by:Anthonippillai.R