பாப்பரசர் பிரான்சிஸ் (வயது 84) கடந்த சில நாட்களாக குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். எனவே இதற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பாப்பரசர் பிரான்சிஸுக்கு எப்போது அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் தெரியவில்லை. எனினும் அறுவைச் சிகிச்சை முடிந்ததும் அது குறித்த தகவல் வெளியிடப்படும் என வத்திக்கான் அறிவித்துள்ளது. நேற்று மருத்துவமனைபத்திரிக்கு செல்வதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாக வழக்கமான ஞாயிறு வழிபாட்டில் அவர் பங்கேற்றார். அதில் கலந்துகொண்ட மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் ஆசிகளையும் வழங்கினார். அப்போது இந்த அறுவைச் சிகிச்சை குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
அதேநேரம் கடந்த வாரம் வழிபாட்டில் பங்கேற்ற மக்களிடம், தனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த அறுவைச் சிகிச்சை குறித்தே அவர் இத்தகைய வேண்டுகோள் விடுத்திருந்ததாகக் கருதப்படுகிறது.
—————-
Reported by : Sisil.L