அரிசியின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

பொலன்னறுவை பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அரிசியின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளனர்.


அதன்படி கீரி சம்பா ஒரு கிலோ 30 ரூபாவாலும்  சம்பா, நாடு ஒரு கிலோ 15 ரூபாவாலும் அதிகரித்துள்ளதாக பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த விலை உயர்வால், ஒரு கிலோ கீரி சம்பா 195 ரூபா, ஒரு கிலோ சம்பா அரிசி 155 ரூபா  மற்றும் ஒரு கிலோ நாடு 130 ரூபாவாக விற்பனை செய்யப்படும் எனவும் ஏனைய அரிசி உற்பத்தி உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த விலை உயர்வு செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
———
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *