அரச சுதந்திர தின நிகழ்வை புறக்கணிக்க கர்தினால் மல்கம் ரஞ்சித் தீர்மானம்

நாளைய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளார்.


செய்தியாளர் மாநாட்டில் அருட்தந்தை சிறில் காமினி இதனைத் தெரிவித்துள்ளார்.


சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் விசேட ஆராதனைகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் அதனையும் இரத்து செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை மற்றும் உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறாமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கர்தினால் மல்கம் ரஞ்சித் இந்த முடிவை எடுத்துள்ளார்.


மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்காக கடந்த வருடம் போன்று இம்முறையும் ஏனைய தேவாலயங்களில் ஆராதனைகள் இடம்பெறும் என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.


அரச நிகழ்வில் கலந்துகொள்ளா விட்டாலும் கர்தினால் ஆராதனைகளில் ஈடுபடுவார் என அவர் தெரிவித்துள்ளார்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *