அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் வெளியிட்டுள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 65 ஆக மாற்றியமைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எந்தவொரு அரச உத்தியோகத்தரும் 55 வயதுக்குப் பின்னர் ஓய்வு பெறலாம் எனவும் 65 வயதுக்குப் பின்னர் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் எனவும் புதிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
——————–
Reported by : Sisil.L