ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதை அடுத்து பீதியடைந்த அரசு ஊழியர்கள் அப்படியே அலுவலகத்தை போட்டு விட்டு வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
தலிபான்களால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அவர்கள் கருதினார்கள். இந்த நிலையில் இன்று தலிபான்கள் ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். அதில், ‘‘அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்பி வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் தொடர்பாக தலிபான்கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே இராணுவத்தில் இருந்தவர்கள் மரண பீதியில் இருக்கிறார்கள்.
————————-
Reported by : Sisil.L