இன்று அரசாங்கத்தின் முக்கிய தீர்மானங்களை ஞானக்கா என்ற பெண்ணே எடுக்கின்றார் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஞானக்காவின் நல்லது கெட்டதைக் கேட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்று கூறிய அவர், தரவு அறிவியலின் அடிப்படையிலேயே நல்ல நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.
ஜனதா விமுக்தி பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
——–
Reported by : Sisil.L