தற்போதைய அரசாங்கம் அதிக வரி மற்றும் அதிக மின் கட்டணத்தை பிரப்பித்து சாதாரண மக்களுக்கு சுமையை ஏற்ப்படுத்தி முயற்சியாண்மையாளர்களைக் கூட நிர்க்கதிக்கு ஆளாக்குவதாகவும், அதுமட்டுமல்லாமல், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முன்வைத்து, துன்பப்படும் மக்கள் தமது கோரிக்கைகளுக்காக குரல் எழுப்பும் போது, அவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி மனித உரிமைகளை நசுக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இவ்வாறான மிகவும் துயர் நிலை ஏற்பட்டுள்ள போதிலும் அனைவரையும் தியாகம் செய்யுமாறு கோரும் அதேவேளை பாரிய தொகையை செலவு செய்து பாராளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேசும் சதியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலை குழந்தைகளுக்கு மதிய உணவும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவும் கிடைக்காத இந்நாட்டில் முச்சக்கரவண்டி ஓட்டுநர் முதல் சுயதொழில் செய்பவர்கள் வரை அனைவரும் ஆதரவற்ற நிலையில் உள்ளதாகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பணம் இல்லாவிட்டாலும் கட்சி தாவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செலுத்துவதற்கு கோடி கோடியாக பணம் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.
பொரளையில் நேற்று (02) இடம்பெற்ற வட்டார மட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
Reported by :Maria.S