தொழிலாளர் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, கணக்காய்வாளர் நாயகத்தையும் COPE குழுவின் அதிகாரங்களையும் விமர்சித்தமை தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
COPE குழு நேற்று கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கணக்காய்வாளர் நாயகத்தின் கடமைகளையும் COPE குழுவின் அதிகாரங்களையும் ஆட்சேபனைக்கு உட்படுத்தி, விமர்சனங்களை முன்வைத்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (05) நடைபெற்ற COPE குழு கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதுடன், பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கருத்தானது தவறான முன்னுதாரணம் எனவும், இதனூடாக COPE குழுவை இழிவுபடுத்துவது தௌிவாகியுள்ளதால், அது குறித்து கடும் அதிருப்தியை COPE குழு வௌியிட்டுள்ளதுடன், கணக்காய்வாளர் நாயகமும் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
Reported by :Maria.S