அமைச்சர் நாமல் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார். இதன்போது அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றையும் தொடக்கி வைத்தார்.


வடமராட்சிக்குச் சென்ற அவர் முள்ளி பகுதியில் 23 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட சேதனக் குப்பைகளை உரமாக மாற்றும் தொழிற்சாலையைத் திறந்து வைத்தார்.


இதைத் தொடர்ந்து அவர், இந்திய அரசாங்கத்தால் யாழ். நகரில் அமைக்கப்படும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இதன் போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவரும் உடன் வந்தார்.


பின்னர், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்குச் சென்ற அவர் பாடசாலையின் நீச்சல் தடாகம், உடல் வலுவூட்டல் நிலையம் என்பவற்றைப் பார்வையிட்டதுடன் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பிலும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வுகளின்போது மக்கள் அவரிடம் மகஜர்களையும் கையளித்திருந்தனர்.

 

இந்த நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ. சுமந்திரன்,  த.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண, யாழ். மாவட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
————————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *