விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பதற்கான யோசனை தொடர்பில் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று (23) விசேட வைத்திய நிபுணர்களுடன் தாம் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.
அரச உத்தியோகத்தர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினால், தமது திட்டங்களுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினால் சுமார் 300 விசேட வைத்திய நிபுணர்கள் இவ்வருட இறுதியில் ஓய்வுபெற நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.
Reported by :Maria.S