அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 91,76, 7,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 3,74,3,320 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பரிசோதனையின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்துள்ளார்.
பைடன், கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளார் என்றும், தற்போது தன்னை தனிமைக்கப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டே பணிகளை அவர் கவனிப்பார் என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தனது புகைப்படத்தை தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்த பைடன் நண்பர்களே, நான் சிறப்பாகச் செயற்படுகிறேன். உங்கள் அக்கறைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
Reported by .Maria.S