அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் கொள்கலன் லொறி நிற்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிசார் அந்த லொறியின் கொள்கலனைத் திறந்து பார்த்த போது, அந்தக் கொள்கலனில் 50-க்கும் அதிகமானோர் மயக்கமடைந்த நிலையில் கிடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்களை பரிசோதனை செய்ததில் கொள்கலனில் 40 பேர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற அகதிகள் கொள்கலன் லொறியில் வந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், டெக்சாஸ் நகருக்கு வந்த பின்னர் வேறு எங்கு செல்வது எனத் தெரியாமல் லொறியை ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்திவிட்டு சாரதி தப்பிச் சென்றதால் கொள்கலனில் இருந்த அகதிகள் அதீத வெப்பம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
——————
Reported by:Anthonippillai.R