அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரோன் துணை வைரஸ்

அமெரிக்காவில் ஒமிக்ரோன் வைரஸின் துணை வைரஸான பிஏ.2 ஆதிக்கம் செலுத்துகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சி.டி.சி. அறிவித்துள்ளது.


ஒமிக்ரோனை விட இந்த துணை வைரஸ் வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக பிஏ.2 வைரஸ், அசல் பிஏ.1 வைரசை விட 30 சதவீதம் அதிகமாகப் பரவும்.


கடந்த 26ஆம் திகதியுடன் முடிந்த ஒரு வார காலத்தில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 54.9 சதவீதத்தினர் பிஏ.2 வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஒரு வாரத்துக்கு முன்பாக இது 39 சதவீதமாக இருந்தது. அதற்கு 2 வாரங்களுக்கு முன்பு 27.8 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *