இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்க அமெரிக்கா 320 மெட்ரிக் தொன் கடலைப் பருப்பை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் ஊடாக Save the Children நிறுவனத்துடன் இணைந்து இன்று இந்த உணவுப் பொருட்கள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
“இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து இலங்கையர்களுக்கும் உதவுவதற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்புக்கு ஒவ்வொரு சத்தான உணவும் சான்றாக இருக்கும்” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு உணவளிப்பதற்காக வழங்கப்பட்ட 3,000 மெட்ரிக் தொன் உணவுக் களஞ்சியத்தின் ஓர் அங்கமாகவே இது வழங்கப்பட்டதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
————
Reported by :Maria.S