கனடாவின் லிட்டன்(lytton) நகரம் கடுமையான வெப்பத்தால் உண்டான தீயினால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
15 நிமிடங்களுக்குள் கிராமம் முழுதும் தீபற்றி எரிந்ததாக லிட்டன் மேயர் ஜான் போல்டர்மான் பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார்.
தீ அனர்த்தத்தால் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதுடன் பலர் காயமுற்றனர். ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
நகரின் வெப்பநிலை 49.6 பாகை செல்சியஸ் ஆக உள்ளது.
வரலாறு காணாத அதிக வெப்பநிலை காரணமாக ஐந்து நாட்களில் 486 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
———————————
Reported by : Sisil.L