நாட்டில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் அடைமழையால் பல நெடுஞ்சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
நீர் நிலைகளை அண்டியுள்ள பல நகரங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
ஏறக்குறைய ஒரு வார காலமாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையால் இன்று காலை கிரிஉல்ல நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.
மகா ஓயா நிரம்பி வழிவதால், நகரின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் 4 அடி உயரத்துக்கு நீரில் மூழ்கியதால், நகரின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
—————–
Reported by : Sisil.L