இந்தியாவிடம் இருந்து கிடைக்கபெறும் யூரியா, மூடையொன்றின் விலையை பத்தாயிரம் ரூபாவுக்கு அடுத்த வாரம் முதல் சகல விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்சமயம் யூரியா மூடையொன்றின் விலை ரூ.42 ஆயிரம் என்ற அதிக விலையில் சந்தையில் விற்பனையாகிறது. இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் உரத்தை விவசாயப் பிரதிநிதிகளின் இணக்கத்துடன் பத்தாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இந்த விலையில் யூரியா மூடையை விற்பனை செய்யுமாறு விவசாயிகள் கடிதம் மூலம் தமக்குக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கம் உரிய தரத்தில் உரத்தை விவசாயிகளுக்கு வழங்கவில்லை என சிலர் தெரிவிக்கும் கருத்து உண்மைக்கப் புறம்பானது என அமைச்சர் தெரிவித்தார்.
65 ஆயிரம் மெற்றிக் தொன்னை ஏற்றிய கப்பல் தற்சமயம் இலங்கை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடையவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து உரத்தை விநியோகிக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
—————
Reported by:Anthonippillai.R