எதிர்வரும் மாதத்துக்கான எரிபொருளை இறக்குமதி செய்யத் தேவையான 420 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்தத் தொகையை வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் கடந்த அமைச்சரவையில் கோரிய போதிலும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ரூபாவை சம்பாதிக்க முடியும் ஆனால் டொலரை அல்ல எனத் தெரிவித்துள்ள அமைச்சர், இந்த நிலை காரணமாக எரிபொருள் இறக்குமதி பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
———————————–
Reported by : Sisil.L