அடுத்த எரிபொருள் கப்பலுக்கு பணம் கொடுக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் பணம் இல்லை

அடுத்த எரிபொருள் கப்பலுக்கு செலுத்தத் தேவையான டொலர்கள் இலங்கை பெற்றோலியம்  கூட்டுத்தாபனத்திடம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதற்குக் காரணம், எரிபொருளுக்காக டொலர்களை வாங்குவதற்குத் தேவையான ரூபா எண்ணெய் நிறுவனத்திடம் இல்லை.
இலங்கை மின்சார சபை போன்ற அரச நிறுவனங்களுக்கு கடன் அடிப்படையில் தொடர்ந்து எரிபொருளை வழங்குவதால் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் ரூபா வருமானத்தை இழந்துள்ளது.


இதன் காரணமாக திறைசேரியில் டொலர்களை கொள்வனவு செய்வதற்கு 214 பில்லியன் ரூபா கோரப்பட்டுள்ள போதிலும், அந்தத் தொகை இல்லாத காரணத்தினால் பணத்தை அச்சடிக்க வேண்டியுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
———–
Reported by: Maria.s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *