அங்கோலா நாட்டில் அரிய வகை வைரம் கண்டுபிடிப்பு

ஆபிரிக்க நாடான அங்கோலாவில் உள்ள லுலோ சுரங்கத்தில் அரிய வகையான மிகப்பெரிய வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது கடந்த 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இளஞ்சிவப்பு வைரம் என அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக லுகாபா டயமண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 170 கரட் எடை கொண்ட இந்த இளஞ்சிவப்பு நிற வைரமானது தி லுலோ ரோஸ் என அழைக்கப்படுகிறது.


லுலோ சுரங்கத்திலிருந்து கண்கவர் வைரம் எடுக்கப்பட்டதன் மூலம் உலகளவில் அங்கோலா முக்கிய இடத்தில் தொடர்ந்து உள்ளதென அங்கோலாவின் கனிம வள அமைச்சர் டயமன்டினோ அசெவெடோ தெரிவித்துள்ளார்.
லுலோ ரோஸ் வைரத்தின் உண்மையான பெறுமதியை அறிய அதனை மெருகூட்ட வேண்டும். அவ்வாறு மெருகூட்டும் போது அதன் எடையில் சுமார் 50 சதவீதத்தை இழக்க நேரிடும்.


இந்த வைரமானது சர்வதேச டெண்டரில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும்.


இது அதிக விலைக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. ஹொங்கொங்கில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சுமார் 59.6 கரட் பிங்க் ஸ்டார் வைரம், 71.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டது.


இதுவரை விற்கப்பட்ட வைரங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டது இதுவாகும்.  


Reported by:Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *