வரலாற்று பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானின் இரதோற்சவம் இன்று(13) நடைபெறுகின்றது.
நல்லூர் கந்தன், தேரேறி திரு வீதி வலம் வரும் அழகு காண்பதற்காய் இலட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தில் கூடியுள்ளனர்.
அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்த மண்டப பூசை ஆகியன காலக்கிரமமாக முருகப் பெருமானுக்கு நடைபெற்றன.
ஆலயத்தின் அசையா மணிகள் ஆறும் ஒருங்கே ஒலிக்க முருகப் பெருமன் தேரேறி வீதியுலா வருவதற்கு
புறப்பட்டுள்ளார்.
பால் காவடிகள், பறவைக் காவடிகள், கற்பூர சட்டிகள், அங்கப்பிரதட்சணம் மற்றும் சிதறுதேங்காய் உடைத்து அடியார்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகத்தில் திரைப்பரீட்சை மற்றும் குரல் தேர்வு 3 ஆவது நாளாக இன்றும்(13) இடம்பெறவுள்ளது.
ஊடகத்துறையில் தடம் பதிக்கும் ஆர்வத்துடன் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்கும் நோக்கில் விசேட கலையகம் அமைக்கப்பட்டுள்ளது.
Reported by :S.Kumara