அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுபெற்றதால் மழையும் இடைவிடாது பெய்தது. இதில் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்த பல வீடுகள் மண்ணில் புதைந்தன. பல வீடுகள் இடிந்து விழுந்தன.
கேரள மாநிலத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 05 சிறுவர்களும் அடங்குகின்றனர். அத்துடன் பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் யிடப்பட்டுள்ளது.
———–
Reported by : Sisil.L