மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
21 ஆம் திகதி முதல் நாளாந்தம் 128 முதல் 130 ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான ரயில்கள் கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபத்திலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவுள்ளன.
——————
Reported by : Sisil.L