விமானப் பயணங்களை மேற்கொள்ளவுள்ள கனேடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் அநேக விமான நிலையங்களில் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இந்த நிலையில் கனடாவில் மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் இந்த நிலைமையை எதிர்நோக்க நேரிடும் என விமானப் பயணங்கள் குறித்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக விமானப் பயண கால தாமதம், விமானப் பயணம் ரத்து, பயணப் பொதிகள் தொலைதல் உள்ளிட்ட நெருக்கடிகள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி விமான நிலையங்கள் பலவற்றில் இந்த நெருக்கடி நிலையை அவதானிக்க முடிவதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆளணி வளப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக விமான நிலையங்களில் நெரிசல் நிலைமை உருவாகியுள்ளது.
எனவே கனேடிய விமானப் பயணிகள் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்க ஆயத்தமாக இருக்க வேண்டுமேன நிபுணர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
———–
Reported by:Anthonippillai.R