வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு நாட்டில் அமைதியின்மையை உருவாக்கும் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
விலைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலான அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் மக்கள் மீது சுமை சுமத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் சந்தையில் செயற்கையாக தட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ள அவர் வர்த்தகர்கள் பதுக்கி வைத்துள்ள பொருட்களை மீட்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் பொருட்களின் விலைகளை  அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை  எடுத்துள்ளது எனவும் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் 15 வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு வர்த்தமானி அறிவித்தலையாவது இரண்டு மாதங்களுக்காவது இறுக்கமாக நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அரசாங்கத்தினால் எந்தத் திட்டத்தினால் இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் நாட்டில் அமைதியின்மையும் ஆர்ப்பாட்டங்களும் காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

———–       
Reported by : Sisil.L

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *