யாழ்.பரிசோதனைக்கூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட
பி.சி.ஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 41 பேர் உட்பட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 62 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள் ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 44 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 599 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில்,
யாழ்.மாவட்டத்தில் 23 பேருக்குத் தொற்று
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர்,பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை யில் ஒருவர், கிளிநொச்சி மாவட்டத்தில் 09 பேருக்குத் தொற்று கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர், கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
வவுனியா மாவட்டத்தில் 06 பேருக்குத் தொற்று
வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 04 பேருக்குத் தொற்று முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
மன்னார் மாவட்டத்தில் 02 பேருக்குத் தொற்று
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 118 பேருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில்,கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர் (10 மாத பெண் குழந்தையும், 07 வயது சிறுவனும் உள்ளடக்கம்) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 08 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
—————
Reported by : Sisil.L