வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக பிளீட் ஒப் த அட்மிரல் வசந்த கரன்னாகொட பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.நான்காம் கட்ட ஈழப் போரின் போது இலங்கை கடற்படைக்குத் தலைமை தாங்கிய கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது போக்குவரத்து அமைச்சின் செயலாளராகவும் பதவி வகித்தார்.
வடமேல் மாகாண முன்னாள் ஆளுநர் ராஜா கொல்லுரே கொவிட்-19 தொற்று காரணமாக காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
————
Reported by : Sisil.L