வடமராட்சியில் நேற்று கரை ஒதுங்கிய மனித எச்சங்கள்

வடமராட்சி – தொண்டமானாறு – கெருடாவில் மேற்கு – சின்னமலை கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் மனித எச்சங்கள் என்று சந்தேகிக்கப்படும் எலும்புகள் சில மீட்கப்பட்டுள்ளன.

நேற்று புதன்கிழமை மாலை அந்தப் பகுதியில் எலும்புகள் சில கரையொதுங்கிய நிலையில் காணப்படுகின்றன என்று வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு வந்த பொலிஸார் அவற்றை மீட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப் படைத்தனர்.இந்த எலும்புகள் தொடர்பில் இன்றைய தினம் சட்ட மருத்துவ அதிகாரி பரிசோதனைகளை நடத்தி தகவல்களை வெளியிடுவார் என்று மருத் துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

 இந்தச் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாரும் விசா ரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, யாழப்பாணத்தின் கரை யோரப் பகுதியில் அண்மைக்காலமாக மனித சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன.இதுவரை நெடுந்தீவில் ஒரு சடலமும் வடமராட்சிப் பகுதியில் 6 சடலங்களும் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
——–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *