வட்கில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88,000 பேர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். வட மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெற்று வரும் நிலையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் 30 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளில் முதலாவது தடுப்பூசி இதுவரை 559,129 பேருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இது வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 86 சதவீதமாகும். இதேபோன்று இரண்டாவது தடுப்பூசி 449,524 பேருக்கு வழங்கப் பட்டிருக்கின்றது. இது 70 சதவீதமாகும்.
இதுவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88,000 பேர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தத் தொகையிலே 40,000 இற்கு மேற்பட் டோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இலங்கை முழுவதிலும் தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகம் உயிரிழந்தனர். எனவே இந்தத் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக வந்து தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
—————–
Reported by : Sisil.L