லிட்ரோவின் புதிய தலைவர் பதவியைப் பொறுப்பேற்றார்; எரிவாயு விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பம்

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முதித பீரிஸ் இன்று நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

 
இதனிடையே, 6 நாட்களாக கடலில் நின்ற எரிவாயுக் கப்பலுக்கு நேற்று செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை செலுத்தியதால் 11 நாட்களுக்குப் பிறகு எரிவாயு விநியோகம் இன்று தொடங்கியது.

 
முதன்மையாக வணிக நிறுவனங்கள், தகனச்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயுவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.


குறைந்த எண்ணிக்கையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும், தீவின் அனைத்து பகுதிகளிலும் எரிவாயு பெற மக்கள் நீண்ட நாட்களாக வரிசையில் நிற்கின்றனர்.
———–

Reported by:Anthonippillai.R



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *