உக்ரைன் இராணுவ ஹெலிகொப்டர்கள் ரஷ்ய எண்ணெய்க் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய Belgorod பிராந்திய ஆளுநர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரஷ்யாவின் Belgorod நகரிலுள்ள எண்ணெய்க் கிடங்கு மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
இரண்டு உக்ரேனிய இராணுவ ஹெலிகொப்டர்கள், ரொக்கெட்டுகளை ஏவி எண்ணெய்க் கிடங்கை தாக்கியதாக Belgorod பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததாகவும், எனினும் அவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை.
இந்த தாக்குதலால் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை , எண்ணெய் கிடங்கின் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L