உக்ரேனின் எல்லைகளில் ரஷ்யப் படைகள் குவிக்கப்படுவதைப் பற்றிய கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவும் பெலாரஸும் 10 நாட்கள் கூட்டு இராணுவப் பயிற்சியைத் தொடங்கவுள்ளன.
இந்நிலையில் இந்த பயிற்சி நடவடிக்கையானது உக்ரேன் மீதான பற்றத்தை மேலும் அதிகரிக்கும் செயற்பாடு என வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி எல்லையில் 100,000 இராணுவ வீரர்களைக் குவித்துள்ள போதிலும், உக்ரேன் மீது படையெடுப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் ரஷ்யா மீண்டும் மீண்டும் மறுத்து வருகின்றது.
எனினும் ரஷ்யாவின் தாக்குதல் எந்த நேரத்திலும் வரலாம் என அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
———————
Reported by : Sisil.L